/

வீட்டைக் காலி செய்ய மறுப்பு: காவல் நிலையத்தில் நடிகர் விஜய் புகார்!

தனக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் இருவரை வெளியேற்றக் கோரி...

News image
Updated On :7 ஜனவரி 2021, 11:40 am

DIN

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் இருவரை வெளியேற்றக் கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தில் செயலாளராக இருந்த ரவிராஜா மற்றும் துணைச் செயலாளராக இருந்த ஏ.சி. குமார் ஆகிய இருவரும் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. நீக்கப்பட்ட இருவரும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் பல ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தார்கள். இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டதால் இருவரும் வீட்டைக் காலி செய்யும்படி விஜய் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் வீட்டைக் காலி செய்யாமல் இருந்துள்ளார்கள். 

இதையடுத்து, தனக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் ரவிராஜா, குமார் ஆகிய இருவரையும் வெளியேற்றக் கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் விஜய் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.