தமிழக முதல்வரைச் சந்தித்தது ஏன்: நடிகர் விவேக் விளக்கம்
மனு அளித்தேன். இன்முகத்துடன் ஏற்றார். நற்செய்தி வரலாம்...


தமிழக முதல்வர் பழனிசாமியைச் சந்தித்ததற்கான காரணத்தை நடிகர் விவேக், ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரபல நடிகர் விவேக், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை நேற்று சந்தித்தார். இதுபற்றி முதல்வர் ட்விட்டர் கணக்கில் கூறப்பட்டதாவது: இன்று (26.1.2021) முகாம் அலுவலகத்தில் திரைப்பட நடிகர் திரு. விவேக் அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார் என்றார்.
இந்நிலையில் தமிழக முதல்வரைச் சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் விவேக். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது:
அரசியலுக்கோ/என் சொந்த காரணமாகவோ முதல்வர் அவர்களைப் பார்க்கவில்லை. தமிழ்த் துறவி அருட்பா தந்த வள்ளலார் (1823 - 1874) தன் வாழ்வில் 33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை வள்ளலார் நெடுஞ்சாலை என்று பெயர் சூட்ட மனு அளித்தேன். இன்முகத்துடன் ஏற்றார். நற்செய்தி வரலாம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...