/

மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகும் நேரம் அறிவிப்பு

இந்தியா மற்றும் 240 நாடுகளில் மாஸ்டர் படத்தை ஓடிடியில் காண முடியும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :28 ஜனவரி 2021, 10:01 am

DIN

விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்றிரவு அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள். 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது. 

மாஸ்டர் படம் வரும் வெள்ளியன்று (ஜனவரி 29) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 13-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட்ட மாஸ்டர் படம், அடுத்த 16 நாள்களில் ஓடிடியில் வெளியாகிறது. இதனால் இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

ஜனவரி 29 முதல் இந்தியா மற்றும் 240 நாடுகளில் மாஸ்டர் படத்தை ஓடிடியில் காண முடியும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. 

இந்நிலையில் மாஸ்டர் படம் வெளியாகும் நேரத்தை அறிவித்துள்ளது அமேசான் பிரைம் நிறுவனம். ட்விட்டரில், மாஸ்டர் படம் வெளியாகும் நேரம் குறித்து ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதில் அளித்த அமேசான் பிரைம் நிறுவனம், ஜனவரி 29, அதிகாலை 12 மணிக்கு (இந்திய நேரம்) மாஸ்டர் படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.