மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி: வெளியானது முதல் பார்வை போஸ்டர்

கமல்ஹாசன் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'விக்ரம்' பட முதல் பார்வை போஸ்டர் மாலை 5 மணிக்கு வெளியானது. 

News image
Updated On :10 ஜூலை 2021, 2:06 pm

DIN


கமல்ஹாசன் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் 'விக்ரம்' பட முதல் பார்வை போஸ்டர் மாலை 5 மணிக்கு வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் 'விக்ரம்' பட பெயர் அறிவிப்பு டீஸர் ஏற்கெனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்க, 'சர்கார்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த, கிரிஷ் கங்காதரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என பல தகவல்கள் உலா வந்தன. ஆனால் அவை அனைத்தும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே இருந்தன. 

இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி அந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. போஸ்டரில் கமல் நடுவில் இருக்க, இடதுபுறம் விஜய் சேதுபதியும், வலதுபுறம் ஃபகத் ஃபாசிலும் இடம் பெற்றுள்ளனர். 

இந்த போஸ்டர் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுவான சினிமா ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. 

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் இருவருமே ஹீரோ, வில்லன் என பல்வேறு பரிணாமங்களில் மிரட்டி வருகின்றனர். அதனால் இவர்களில் யார் வில்லன்? அல்லது கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட அனைவரும் எதிர்மறை கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்களா? என்பது போன்ற விவாதங்களில் ரசிகர்கள் ஈடுபடத் துவங்கியுள்ளனர். 

விரைவில் அந்தக் கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.