வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற பழம்பெரும் நடிகை காலமானார்

பழம்பெரும் நடிகை சுரேகா சிக்ரி, மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

News image
3-வது முறையாக தேசிய விருதை பெற்றபோது....
Updated On :16 ஜூலை 2021, 7:48 am

DIN

பழம்பெரும் நடிகை சுரேகா சிக்ரி, மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 75.

1978-ல் திரைப்பட நடிகையாக அறிமுகம் ஆனவர் சுரேகா சிக்ரி. ஏராளமான ஹிந்தி மற்றும் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த சுரேகா, சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். 1988-ல் தமாஸ், 1995-ல் மம்மோ, 2019-ல் பதாய் ஹோ ஆகிய படங்களுக்காக அவருக்குத் தேசிய விருதுகள் கிடைத்தன. கடைசியாக அவர் நடிப்பில் கோஸ்ட் ஸ்டோரீஸ் என்கிற படம் கடந்த வருடம் வெளிவந்தது. 

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த சுரேகா சிக்ரி, மாரடைப்பால் இன்று காலமானார். சுரேகாவின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

சுரேகா சிக்ரி (இடது)

சுரேகா சிக்ரி (இடது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.