ஆகஸ்ட் 19-ல் திரையரங்குகளில் வெளியாகும் அக்ஷய் குமார் படம்
அக்ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரேஷி, லாரா தத்தா நடித்துள்ள படம் - பெல் பாட்டம்...


ரஞ்சித் எம். திவாரி இயக்கத்தில் அக்ஷய் குமார், வாணி கபூர், ஹியூமா குரேஷி, லாரா தத்தா நடித்துள்ள படம் - பெல் பாட்டம். மே 28 அன்று வெளிவருவதாக இருந்த இந்தப் படத்தின் வெளியீடு கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 15 அன்று அக்ஷய் குமார் நடித்த சூர்யவன்ஷி, பெல் பாட்டம் ஆகிய இரு படங்களும் வெளியாவதாகத் தகவல்கள் வெளியாகின. எனினும் இதை மறுத்து அறிக்கை வெளியிட்டார் அக்ஷய் குமார். பெல் பாட்டம் படம் ஜூலை 27 அன்று திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 19 அன்று திரையரங்குகளில் பெல் பாட்டம் படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...