மருத்துவமனையில் மூத்த நடிகர் திலீப் குமார்: உடல்நிலை குறித்து புதிய தகவல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் மூத்த நடிகர் திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் - twitter.com/TheDilipKumar
படம் - twitter.com/TheDilipKumar

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் மூத்த நடிகர் திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998-ல் நடித்தார்.

98 வயது திலீப் குமாருக்குச் சமீபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஆக்சிஜன் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

திலீப் குமாரின் உடல்நிலை பற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வாட்ஸ்அப் செய்திகளை நம்பவேண்டாம். திலீப் குமார் நலமாக உள்ளார். அனைவருடைய பிரார்த்தனைகளுக்கும் நன்றி. மருத்துவர்கள் அளித்த தகவலின்படி மூன்று நாள்களுக்குள் வீட்டுக்குத் திரும்புவார் எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com