நயன்தாராவுடன் திருமணம் எப்போது?: விக்னேஷ் சிவன் பதில்
நடிகை நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்கிற ரசிகரின் கேள்விக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதில்


நடிகை நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்கிற ரசிகரின் கேள்விக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதில் அளித்துள்ளார்.
நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடுவார் விக்னேஷ் சிவன். காதல் பற்றிய மறைமுகப் பதிவுகளும் அவ்வப்போது வெளிவரும். தன்னுடைய வருங்காலக் குழந்தைகளின் தாயான நயன்தாராவுக்கு வாழ்த்துகள் எனக் கடந்த வருடம் அன்னையர் தினத்துக்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஓணம் பண்டியைக் கொண்டாட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கொச்சின் சென்றார்கள். பிறகு கேரளாவிலிருந்து நேராக கோவா சென்று விடுமுறையைக் கழித்தார்கள்.
இந்நிலையில் இன்ஸ்டகிராமில் ரசிகர்களுடன் உரையாடினார் இயக்குநர் விக்னேஷ் சிவன். அப்போது ரசிகர் ஒருவர், நயன்தாராவை ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை. அதற்காகக் காத்திருக்கிறேன் எனக் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த விக்னேஷ் சிவன், திருமணத்துக்கு மிகவும் செலவாகும். எனவே திருமணத்துக்காக பணத்தைச் சேமித்து வருகிறேன். கரோனா முடியவும் காத்திருக்கிறேன் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...