45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நயன்தாரா பற்றிய ரசிகர்களின் கேள்விகள்: விக்னேஷ் சிவன் அளித்த பதில்கள்

வீட்டில் உள்ள அனைத்து பாத்திரங்களையும் அவரே கழுவி வைத்துவிடுவார். 

News image
Updated On :28 ஜூன் 2021, 8:36 am

DIN

ரசிகர்களுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் நயன்தாரா பற்றிய பல விஷயங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்துகொண்டார்.

நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடுவார் விக்னேஷ் சிவன். காதல் பற்றிய மறைமுகப் பதிவுகளும் அவ்வப்போது வெளிவரும். தன்னுடைய வருங்காலக் குழந்தைகளின் தாயான நயன்தாராவுக்கு வாழ்த்துகள் எனக் கடந்த வருடம் அன்னையர் தினத்துக்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஓணம் பண்டியைக் கொண்டாட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தில் சென்னையிலிருந்து கொச்சின் சென்றார்கள். பிறகு கேரளாவிலிருந்து நேராக கோவா சென்று விடுமுறையைக் கழித்தார்கள். 

இந்நிலையில் ரசிகர்கள் கேட்ட pஅல கேள்விகளுக்கு இன்ஸ்டகிராமில் பதில் அளித்துள்ளார் விக்னேஷ் சிவன். நயன்தாரா பற்றிய பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

நயன்தாராவுக்கு அளித்த முதல் பரிசு?

தங்கமே பாடல்

நயன்தாராவுக்கு எந்தத் தோற்றம் பொருத்தமாக இருக்கும்? மேற்கத்திய உடையா, பாரம்பரிய உடையா?

அவர் புடவையில் இருப்பது மிகவும் பிடிக்கும்.

நயன்தாரா அழகின் ரகசியம் என்ன?

பிரார்த்தனைகள்

நயன்தாராவுடன் சென்ற விருப்பமான இடம்?

அவருடன் சென்ற எல்லா இடங்களும் உடனடியாக எனக்குப் பிடித்துவிடும்.

நயன்தாராவும் நீங்களும் எடுத்துக்கொண்ட ரகசிய புகைப்படம்

Story image

உங்கள் வாழ்க்கையில் சந்தித்த சிறந்த நபர்

நயன்தாராவின் அம்மா, ஓமன குரியன்.

நயன்தாராவை ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை? 

திருமணத்துக்கு மிகவும் செலவாகும். எனவே திருமணத்துக்காக பணத்தைச் சேமித்து வருகிறேன். கரோனா முடியவும் காத்திருக்கிறேன்.

நயன்தாரா பற்றிய ரகசியம் ஏதாவது?

டின்னர் முடிந்த பிறகு வீட்டில் உள்ள அனைத்து பாத்திரங்களையும் அவரே கழுவி வைத்துவிடுவார். 

நயன்தாரா நடித்ததில் பிடித்த படம்

ராஜா ராணி

நயன்தாராவின் சமையலில் பிடித்த உணவு

கீ ரைஸ், சிக்கன் கறி. 

நயன்தாராவுடன் நீங்கள் ஏன் நடிக்கக் கூடாது?

முயற்சி செய்யலாம். ஆனால் அவர் கண்டுபிடித்து விடுவார். 

நீங்களும் நயன்தாராவும் முத்தம் எடுத்துக்கொண்ட புகைப்படம்?

நான் வேலையில் மும்முரமாக இருப்பேன். அப்போது யாராவது புகைப்படம் எடுக்க வேண்டும். 

எல்லோரும் நயன்தாராவைப் பற்றி கேட்கிறார்கள். எப்படி உணர்கிறீர்கள்?

பெருமையாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.