எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஹரி இயக்கத்தில் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர்: பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது! (படங்கள்)

அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் தேர்வாகியுள்ளார்...

News image
Updated On :3 மார்ச் 2021, 12:20 pm

DIN

ஹரி இயக்கும் 16-வது படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஹரி இயக்கிய சாமி 2 படம் 2018-ல் வெளியானது. ஆறு மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை அடுத்து, சூர்யா - ஹரி கூட்டணி 6-வது தடவையாக அருவா படத்தில் இணைவதாக இருந்தது. எனினும் தற்போது தனது திட்டத்தை மாற்றியுள்ளார் ஹரி. டிரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் உறவினர்களான ஹரியும் அருண் விஜய்யும் முதல்முறையாக இணைகிறார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. 

அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் தேர்வாகியுள்ளார். பிரகாஷ் ராஜ், ராதிகா, ஜெயபாலன், யோகி பாபு போன்றோரும் நடிக்கிறார்கள். இசை - ஜி.வி. பிரகாஷ். 

ஹரி - அருண் விஜய் இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.