வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பும்ராவைத் திருமணம் செய்கிறாரா நடிகை அனுபமா?: தாயார் மறுப்பு

கிரிக்கெட் வீரர் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்யவுள்ளதாக வெளியான தகவலை...

News image
Updated On :6 மார்ச் 2021, 8:01 am

DIN

கிரிக்கெட் வீரர் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்யவுள்ளதாக வெளியான தகவலை அனுபமாவின் தாயார் மறுத்துள்ளார்.

சொந்தக் காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் பும்ரா பங்கேற்கவில்லை. அடுத்து நடைபெறவுள்ள டி20 தொடரில் அவர் இடம்பெறவில்லை. பும்ராவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் பும்ராவை நடிகை அனுபமா பரமேஸ்வரன் திருமணம் செய்யவுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அனுபமாவின் தாயார் சுனிதா மறுத்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

பும்ராவும் அனுபமாவும் இன்ஸ்டகிராமில் ஒருவரை ஒருவர் பின்தொடர்வதைப் பிடிக்காதவர்கள் தான் இருவரையும் இணைத்து செய்திகள் வெளியிடுகிறார்கள். அனுபமாவை எல்லோரும் மறந்திருக்கும்போது புதிய கதை வெளியாகும். இதை நேர்மறையாகவே பார்க்கிறோம். இதற்கு முன்பும் அனுபமாவை பும்ராவுடன் சேர்த்து எழுதினார்கள். இதன்பிறகு இருவரும் ஒருவரையொருர் இன்ஸ்டகிராமில் பின்தொடர்வதை நிறுத்தி விட்டார்கள் என நினைக்கிறேன். ஒருமுறை விடுதி ஒன்றில் அனுபமா படப்பிடிப்பில் இருந்தார். அதில் பும்ராவும் வந்து தங்கினார். அப்போதுதான் இருவரும் முதல்முறையாகச் சந்தித்தார்கள். இப்போது இருவரையும் பற்றி ஏன் செய்திகள் வெளிவருகின்றன என எனக்குப் புரியவில்லை. தற்போது படப்பிடிப்புக்காகத்தான் ராஜ்கோட்டுக்கு அனுபமா சென்றுள்ளார். மக்கள் எவ்விதமான வதந்தி பரப்பினாலும் அதில் உண்மையில்லை. வதந்திகளை நாங்கள் வேடிக்கையாகவே எடுத்துக்கொள்வோம் என்றார். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.