பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
ராதே ஷ்யாம் படம் ஜூலை 30 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ். இதற்கு அடுத்ததாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்துள்ளார். மேலும் - ஆதிபுருஷ், சலார், தீபிகா படுகோனுடன் ஒரு படம் என பல படங்களில் நடித்து வருகிறார். பாகுபலி 2, சாஹோ படங்களுக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள ராதே ஷ்யாம் படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது.
ராதே ஷ்யாம் படம் ஜூலை 30 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...