கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை காஜல் அகர்வால்
வாய்ப்பிருக்கும்போது அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று ட்விட்டரில் காஜல் அகர்வால் கூறியுள்ளார்.


நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். வெங்கட் பிரபு இயக்கிய லைவ் டெலிகாஸ்ட் இணையத்தொடரிலும் நடித்தார். காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் - படம் பாரிஸ் பாரிஸ். நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
தொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம் செய்தார் காஜல் அகர்வால். மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
இந்நிலையில் காஜல் அகர்வாலும் அவருடைய கணவர் கெளதம் கிச்லுவும் மும்பையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள்.
வாய்ப்பிருக்கும்போது அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று ட்விட்டரில் காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...