சமந்தாவுடனான விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யாவின் முதல் இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்: ''ஒரு காதல் கடிதம்''
சமந்தாவுடனான பிரிவுக்கு பிறகு நாக சைதன்யாவின் முதல் இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவும் சமந்தாவும் பிரிவதாக சமீபத்தில் அறிவித்தனர். பிரிவுக்கு பிறகு இருவரும் நண்பர்களாகவே தொடர்வோம் என்று தெரிவித்தனர்.
தற்போது 'காத்து வாக்குல ரெண்டு காதல்', டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் என சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும் அல்லு அர்ஜூன், ஃபகத் ஃபாசில் இணைந்து நடித்து வரும் 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடவிருக்கிறார்.
அதே போல 'பங்கர் ராஜு', 'தேங்க் யூ', 'லால் சிங்க் சத்தா' உள்ளிட்ட படங்களில் நாக சைதன்யா நடித்து வருகிறார். மேலும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நாக சைதன்யா நடிக்கவிருக்கிறார். இந்த வெப் சீரிஸில் பிரியா பவானி ஷங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த நிலையில் சமந்தாவுடனான பிரிவுக்குப் பிறகு நாக சைதன்யா முதன் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், கிரீன் லைட் என்ற புத்தகத்தை பகிர்ந்துள்ள அவர், ''வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம். உங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி மேத்யூ'' என்று தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு நாளில் அவருக்கு பிறந்த நாள் வரவிருக்கும் நிலையில் ரசிகர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...