விஜய், தனுஷ் வரிசையில் 3வது இடத்தில் சிவகார்த்திகேயன் : வெளியான தகவல்
நடிகர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் 3 ஆம் இடத்தில் இருக்கிறது.


நடிகர் விஜய்யின் மாஸ்டர், தனுஷின் கர்ணன் படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் இந்த வருடம் அதிகம் வசூலித்த படங்களில் 3 ஆம் இடத்தில் இருக்கிறது.
நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் திரைப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப்
பெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதையும் படிக்க | பாரதி கண்ணம்மா: கடுப்பேத்துறாங்க மை லார்ட்!
இந்தப் படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் முதல் நாளில்
ரூ.7.36 கோடி வசூலும், இரண்டாம் நாளில் ரூ.8.05 கோடி வசூலும் பெற்றது.
முதல் இரண்டு நாள் வசூலைப் பொறுத்தவரை இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படங்களில் டாக்டர் திரைப்படம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக
கூறப்படுகிறது. முதல் இரு இடங்களில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் மற்றும் தனுஷின் கர்ணன் படமும் உள்ளன. இந்த வாரம் தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் இந்த வாரமும் டாக்டர் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...