'கோவமா பார்த்தது இல்லயே ? காட்டாறு !':ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' பட டீசர் இதோ !
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.


சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அண்ணன் - தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து அண்ணாத்த மற்றும் சாரைக் காற்றே ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை வைத்து பார்க்கும்பொழுது ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அண்ணாத்த படம் அமையும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. டீசரை பகிர்ந்து ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...