மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

'உங்கள எல்லோரும் பாராட்டுறது...': சூர்யாவுக்கு உருக்கமாக நன்றி சொன்ன சிவகார்த்திகேயன் - எதுக்கு தெரியுமா ?

உடன்பிறப்பே படத்தின் மூலம் இயக்குநர் இரா.சரவணனுக்கு வாய்ப்பளித்த நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :15 அக்டோபர் 2021, 5:30 pm

உடன்பிறப்பே படத்தின் மூலம் இயக்குநர் இரா.சரவணனுக்கு வாய்ப்பளித்த நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார். 

நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள 'உடன்பிறப்பே' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தை இரா.சரவணன் இயக்கியுள்ளார். 

இந்தப் படத்தில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, கலையரசன், நிவேதிதா சதீஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்னர். டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அண்ணன் தங்கைக்கு இடையிலான உறவு சிக்கலை இந்தப் படம் பேசியுள்ளது. 

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''உடன்பிறப்பே வாழ்த்துகள் சரவணன் அண்ணா. உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் வெற்றியாக அமையும். உங்களை எல்லோரும் பாராட்டுவதைக் கேட்பது தான் எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. சரவணன் அண்ணாவின் கனவை நினைவாக்கிய சூர்யா சார், சசிகுமார் சார், ஜோதிகா மேம் ஆகிய படக்குழுவினருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.