ராம் சரணுடன் இயக்குநர் ஷங்கர் இணையும் படத்தின் பட்ஜெட் இவ்வளவா ? : வெளியான தகவல்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தொடர் பிரச்னைகளின் காரணமாக இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது. இந்த நிலையில் ராம் சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தின் பணிகளை இயக்குநர் ஷங்கர் துவங்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். ஜெயராம் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இசையமைப்பாளர் தமனை பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி முதல் புனேவில் துவங்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தப் படத்துக்கு ரூ.200 கோடி பட்ஜெட்டை ஷங்கர் நிர்ணியித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதை எழுதி வருவதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...