எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படத்தில் இருந்து வெளியான மருதாணி பாடல் இதோ

ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படத்தில் இருந்து மருதாணி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

News image
Updated On :18 அக்டோபர் 2021, 12:34 pm

DIN

ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படத்தில் இருந்து மருதாணி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. டி.இமான் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இருந்து டீசர் மற்றும் 2 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. 

இந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து, மருதானி என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடல் குறித்து வெளியான போஸ்டரில் மீனாவும், குஷ்புவும் ரஜினிகாந்துடன் இணைந்து நடனமாடுவது போல் காட்டப்படுகிறது. இதனையடுத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினியுடன் நடனமாடுவது ரசிகர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை வழங்கியுள்ளது. 

சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சூரி, சதிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. டீசரை வைத்து பார்க்கும்பொழுது அண்ணாத்த திரைப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.