எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரஜினிகாந்த்தின் 'அண்ணாத்த' டிரெய்லர் : சன் பிக்சர்ஸ் அதிரடி அறிவிப்பு !

நடிகர் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த பட டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

News image
Updated On :26 அக்டோபர் 2021, 12:49 pm

DIN

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ரஜினி காந்த்தின் தங்கையா கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளதாகவும், அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படம் ரஜினிகாந்த்துக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.