இருமுறை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பாலிவுட் நட்சத்திரத்துக்கு கரோனா பாதிப்பு!
இருமுறை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுடன் தான் பணிபுரிந்தேன்...


இயக்குநராகவும் நடன இயக்குநராகவும் அறியப்படும் பாலிவுட் நட்சத்திரம் ஃபரா கான், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல நடன இயக்குநரான ஃபரா கான் - மைன் ஹூன் நா, ஓம் சாந்தி ஓம், ஹாப்பி நியூ இயர் போன்ற படங்களை இயக்கியுள்ளார். சில படங்களில் நடித்துள்ளார்.
இருமுறை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் ஃபரா கான். இதுபற்றி இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:
இருமுறை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளேன். அதேபோல இருமுறை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுடன் தான் பணிபுரிந்தேன். இருந்தும் எனக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...