அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ஒரே மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்

கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிற சூழலில் அனைத்து மாநிலங்களிலும் திரையரங்கம் திறக்கப்பட்டு வரும் வேளையில் தமிழகத்திலும் கடந்த மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டது. 

News image
ஒரே மாதத்தில் அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்
Updated On :2 செப்டம்பர் 2021, 7:22 am

DIN

கரோனா பரவல் தீவிரமடைந்து வருகிற சூழலில் அனைத்து மாநிலங்களிலும் திரையரங்கம் திறக்கப்பட்டு வரும் வேளையில் தமிழகத்திலும் கடந்த மாதம் திரையரங்குகள் திறக்கப்பட்டது. 

ஆனால் இந்த மாதம் (செப்டம்பர்) தான் புதுப்படங்கள் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. 100 படங்களுக்கு மேல் வெளியீட்டிற்கு காத்திருக்கும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 4 படங்கள் இந்த ஒரே மாதத்தில் வெளியாக இருக்கிறது.

முதல் படமாக செப்-9 தேதி அன்று மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவான  'லாபம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

அதற்கடுத்து தில்லி பிரசாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி , பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்த அரசியல் படமான 'துக்ளக் தர்பார்' திரைப்படம் செப்-10 ஆம் தேதி நேரடியாக சன் தொலைக்காட்சியிலும் மறுநாள் நெட்பிளிக்ஸ் தளத்திலும்  வெளியாகிறது.

பின் செப்-17 அன்று தீபக் சுந்தரராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தாப்ஸி, ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'அனபெல் சேதுபதி'  திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

இறுதியாக இதே மாதம் மணிகண்டன் இயக்கத்தில் உருவான 'கடைசி விவசாயி' திரைப்படமும் திரையரங்கில் வெளியாக உள்ளது. ஆனால் வெளியீடு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.