கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

'நண்பன்' படத்தில் மகேஷ் பாபு ஏன் நடிக்க மறுத்தார்?: இயக்குநர் சொன்ன காரணம்

நண்பன் படத்தில் மகேஷ் பாபு நடிக்காததன் காரணத்தை இயக்குநர் ஸ்ரீனு வைட்லா தெரிவித்தார். 

News image
Updated On :28 செப்டம்பர் 2021, 1:31 pm

DIN

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமீர்கான், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி பெரும் நம் நாட்டின் கல்வி அமைப்பு குறித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம் '3 இடியட்ஸ்'. இந்தப் படத்தை தமிழில் 'நண்பன்' என்ற பெயரில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோரைக் கொண்டு இயக்குநர் ஷங்கர் மறு உருவாக்கம் செய்தார். தமிழிலும் இந்தப் படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. 

இந்த நிலையில் நண்பன் படத்தில் விஜய் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் சூர்யா, மகேஷ் பாபு ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. இந்த நிலையில் இறுதியாக விஜய்யே அந்த வேடத்தில் நடித்தார். இந்தப் படத்தில் விஜய் நன்றாக நடித்திருந்ததாக பாராட்டுகள் குவிந்தன.

இந்த நிலையில் மகேஷ் பாபு ஏன் நண்பன் படத்தில் நடிக்கவில்லை என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது. தூக்குடு பட இயக்குநர் ஸ்ரீனு வைட்லா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மகேஷ் பாபு அளித்த விருந்து ஒன்றில் கலந்துகொண்டேன். அப்போது மகேஷ் பாபுவிடம், தூக்குடு படத்தின் சில காட்சிகளையும், வசனங்களையும் தெரிவித்தேன்.

உடனடியாக அவரது மனைவியை அழைத்த மகேஷ் பாபு, நான் நண்பன் படத்தில் நடிக்கப்போவதில்லை என்றும், என் படத்தில் நடிக்கப்போவதாகவும் கூறினார் என்றார். தூக்குடு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் படம் வெளியாகி கடந்த வாரத்துடன் 10 வருடங்களை நிறைவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.