தனுஷின் 44வது படம் குறித்து, சன் பிக்சர்ஸின் அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'அசுரன்' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியிருந்தது.
இதையும் படிக்க| திருமண விடியோவைப் பகிர்ந்த 'கண்ணான கண்ணே' நடிகை
இந்தப் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷும், சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை இயக்குநர் வெற்றிமாறனும் பெற்றனர். இந்தப் படம் தெலுங்கில் 'நாரப்பா' என்ற பெயரில் நடிகர் வெங்கடேஷ் நடித்து ரீமேக் செய்யப்பட்டது.

அசுரன் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பு இந்தப் படத்துக்கு பெரும் பலமாக அமைந்திருந்தது. இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் மீண்டும் தனுஷூடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை தனுஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நடிக்கிறார். யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கி மித்ரன் ஜவஹர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். இயக்குநர் இமையம் பாரதிராஜா இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்தப் படத்துக்காக தனுஷூடன், இசையமைப்பாளர் அனிருத் இணையவிருக்கிறார்.
.@prakashraaj joins the cast of #D44.
â Sun Pictures (@sunpictures) August 4, 2021
@dhanushkraja @anirudhofficial pic.twitter.com/DYOcTn0uuj
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயகத்தின் மீது தவெகவிற்கு நம்பிக்கை இல்லை - கனிமொழி | TVK | DMK
நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!

ஆப்கன் மழை, வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி.. காணாமல் போனவர்களை மீட்கும் பணி தீவிரம்!







