'ஜெய் பீம்' படத்துக்கு எதிராக பேசினாரா சந்தானம்?: ட்விட்டரில் ஆதரவாகவும், எதிராகவும் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

ஜெய் பீம் படம் குறித்து சந்தானம் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன
'ஜெய் பீம்' படத்துக்கு எதிராக பேசினாரா சந்தானம்?: ட்விட்டரில் ஆதரவாகவும், எதிராகவும் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

சூர்யாவின் 'ஜெய் பீம்' படம் அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி தமிழகத்தை தாண்டி இந்திய அளவில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பல்வேறு மொழி பிரபலங்கள் 'ஜெய் பீம்' படத்தைப் பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்தப் படத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இதனயைடுத்து அந்த சின்னம் படத்தில் இருந்து மாற்றப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் படக்குழுவைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, எந்தவொரு சமுகத்தையும் அவமதிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்று விளக்கமளித்திருந்தார். 

இதனயைடுத்து நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக வி ஸ்டேண்ட் வித் சூர்யா என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது. திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் அவருக்கு ஆதரவாய் கருத்து தெரிவித்தனர். இயக்குநர் வெற்றிமாறன், சமூக நீதியை விரும்பாதவர்களுக்கு இத்தகைய திரைப்படங்கள் ஒருவத பதற்றத்தை ஏற்படுத்தவது இயல்பே என்று சூர்யாவுக்கு ஆதரவாய் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் நடிகர் சந்தானம் தனது 'சபாபதி' படத்தின் நிகழ்ச்சியில், ''இந்து மதத்தை உயர்த்தி காட்டுங்கள். உங்களுடைய கருத்தை உயர்த்தி காட்டுங்கள். அது பிரச்னையில்லை. ஆனால் அடுத்தவர்களை தாழ்த்திக் காட்டாதீர்கள். 'ஜெய் பீம்' படத்துக்காக அல்ல. பொதுவாகவே இந்துமதம் நல்லதென்றால் அதை உயர்த்தி பேசலாம். மற்ற மதங்களை தாழ்த்தி பேசாதீர்கள்.

சினிமா என்பது 2 மணி நேரம் அனைத்து சாதி மதத்தினரும் தங்கள் கவலைகளை மறந்து ஒரு படத்தை பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு விருந்தாக அந்தப் படம் இருக்க வேண்டும். அதனால் இங்கே அது தேவையில்லாத விஷயம். ஒரு படத்தை பார்க்காமல் விமர்சனம் செய்வதும் தவறு'' என்றார். 

இதனையடுத்து நடிகர் சந்தானம் 'ஜெய் பீம்' படத்துக்கு எதிராக பேசி விட்டதாக சாதி வெறியன் சந்தானம் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மற்றொரு புறம் அவருக்கு ஆதரவாக ஐ ஸ்டேன்ட் வித் சந்தானம் என்ற ஹேஷ்டேக் மூலம் அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com