மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தை உறுதி செய்த இசையமைப்பாளர் தமன் !

சிவகார்த்திகேயனின் அடுத்தப் படம் குறித்து இசையமைப்பாளர் தமன் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :17 நவம்பர் 2021, 9:36 am

DIN

'டாக்டர்' படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவர் தற்போது சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, சூரி, ஆர்ஜே விஜய், ஷிவாங்கி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் சமீபத்தில் நிறைவு செய்தார். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இதனையடுத்து தெலுங்கில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற 'ஜதி ரத்னாலு' பட இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது சுட்டுரைப் பக்கம் மூலம் இசையமைப்பாளர் தமனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தார். அந்தப் பதிவில் உங்களிடம் இருந்து 'புட்ட பொம்மா' பாடல் போன்று நிறையப் பாடல்கள் வெளியாக வாழ்த்துகள் என்று தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த தமன், ''உங்கள் அன்பு நன்றி சகோதரா, பின்றோம், தட்றோம். எஸ்கே21'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் தமன் இணைவது உறுதியாகியுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.