தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தலைப்பு சர்ச்சை : முதல் பார்வை போஸ்டர் மூலம் நடிகர் வடிவேலு விட்ட சவால் !

வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :8 அக்டோபர் 2021, 12:31 pm

DIN

வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 

தயாரிப்பாளர் சங்கத்தல் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டகவுடன் நடிகர் வடிவேலு நடிக்க நாய் சேகர் படத்தின் அறிவிப்பு வெளியானது. நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கும் நாய் சேகர் என்று பெயரிடப்பட்டிருந்தது. இதனால் வடிவேலு படத்துக்கு சிக்கல் எழுந்தது. 

இந்த நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் அதற்கு முன் சதீஷ் நடிக்கும் 'நாய் சேகர்' படத்தின் முதல் பார்வை போஸ்டர் அதிரடியாக வெளியானது. சதீஷ் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதால் தங்கள் படத்தின் பெயரை மாற்ற முடியாது என்று தயாரிப்பு தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது. 

Story image

இந்த நிலையில் வடிவேலுவின் படத்துக்கு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்று பெயர் வைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியது. இதன் ஒரு பகுதியாக திடீரென இந்தப் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. மூன்று நாய்களுடன் டான் போன்ற தோற்றத்தில் வடிவேலு அமர்ந்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். லைக்கா புரொடக்சன் இந்தப் படத்தை தயாரிக்கவிருக்கிறது.  போஸ்டரில் இது ஒரிஜினல் என்று குறிப்பிட்டுள்ளது. சதீஷின் நாய் சேகர் படத்துக்கு விடப்பட்ட சவால் போன்று உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.