
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரியங்காவும் அவரது கணவரும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய் டிவியின் முகமாகவே மாறிவிட்டவர் பிரியங்கா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான தொடர்களை தொகுத்து வழங்கி விட்டார். தற்போது பிக்பாஸ் நிகழச்சியிலும் கலந்துகொண்டுள்ளார். விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சிகளைப் போலவே பிக்பாஸையும் கலகலப்பாக்கி வருகிறார்.

பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணிபுரியும் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து அதிகம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. இதனால் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

பிரியங்கா, சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, கிங்க்ஸ் ஆஃப் ஜுனியர்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸுக்கு பிறகு அர்ச்சனா போல ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு நடுவராக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்காவிற்கு பதிலாக சிவாங்கி தொகுத்து வழங்கவிருக்கிறாராம்.
_.jpeg)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







