பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

17 வயதில் எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்து நமீதா சொன்ன ரகசியம்

நடிகை நமீதா தனது 17 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, இது குறித்து தகவலை பகிர்ந்துள்ளார். 

Published On :

நடிகை நமீதா தனது 17 வயதில் எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, இது குறித்து தகவலை பகிர்ந்துள்ளார். 

தமிழில் விஜயகாந்த், பிரபு தேவா இணைந்து நடித்த 'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுமகானவர் நமீதா. தொடர்ந்து 'மகா நடிகன்', 'ஏய்', 'பில்லா', 'நான் அவன் இல்லை' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 

இவரது நடிப்பில் 'பொட்டு' என்ற படம் கடைசியாக வெளியாகியிருந்தது. தற்போது தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் ஒறு புகைப்படம் பகிர்ந்து, ''இது எனது 17 வயதில் எடுக்கப்பட்டது. மும்பையில் பெரிய கனவுகளுடன் இருந்தேன். 2000 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பொம்மன் இரானி இந்தப் புகைப்படத்தை எடுத்தார். இந்தப் புகைப்படம் நான் ஃபெமினா மிஸ் இந்தியா 2001-ல் வெல்லக்காரணமாக அமைந்தது''  என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.