கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இயக்குநர் சிவாவுடன் இணையும் சூர்யா: வெற்றிமாறனின் வாடிவாசல் ?

எதற்கும் துணிந்தவன் படத்துக்குப் பிறகு இயக்குநர் சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். 

News image
Updated On :21 செப்டம்பர் 2021, 5:51 am

DIN


எதற்கும் துணிந்தவன் படத்துக்குப் பிறகு இயக்குநர் சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார். 

நடிகர் சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில்  நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சண்டைக் காட்சி தற்போது தென்காசியில் படமாக்கப்பட்டி வருகிறது. 

பாண்டிராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். ரத்னவேலு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இயக்குநர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. சூர்யாவின் 39வது படமாக இது உருவாகவுள்ளது. 

இதனையடுத்து சிவா படத்துக்குப் பிறகே சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனையடுத்து அவர் வாடிவாசல் படத்தின் முன்கட்ட தயாரிப்பு பணிகளில் ஈடுபவார் என்று கூறப்படுகிறது. வாடிவாசல் 1960களின் பின்னணியில் உருவாகும் படம் என்பதால் அதற்கான பணிகள் தாமதமாகலாம். அதற்கு முன் சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடித்து முடித்து விடுவார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.