தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

'வலிமை' படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் ரசிகர்கள்: அனைத்து சாதனைகளும் முறியடிப்பு

ஓடிடியில் வெளியாகியுள்ள 'வலிமை' படத்தை 50 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 10:42 am

DIN

ஓடிடியில் வெளியாகியுள்ள 'வலிமை' படத்தை 50 கோடி நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் அஜித் நடித்துள்ள 'வலிமை' திரைப்படம் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக வட மாநில ரசிகர்கள் இந்தப் படத்தை அதிகம் பார்த்து வருகின்றனராம். 

இந்த நிலையில் வலிமை படத்தை ஜி5 தளத்தில் ரசிகர்கள் 50 கோடி நிமிடங்கள் பார்த்துள்ளார்களாம். இதுகுறித்து தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில்,''வலிமை அதிக முறை பார்த்த மற்றும் அதிக முறை மீண்டும் பார்த்த படமாக இருக்கிறது. வலிமை படம் தொடர்ந்து அனைத்து சாதனைகளையும் முறியடித்து வருகிறது. 500 மில்லியன் நிமிடங்கள் வலிமை படம் பார்க்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

'வலிமை' படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக ஏகே 62 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிகர் அஜித் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்க, வினோத் இயக்குகிறார். இந்தப் படத்துக்காக சமீபத்தில் நடிகர் அஜித் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.