நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்திலிருந்து அரபிக் குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இந்திய அளவில் டிரெண்டானது. தற்போது இந்தப் படத்திலிருந்து 3 வது பாடலான ‘திரைத் தீப்பிடிக்கும்’ பாடல் வெளியாகியுள்ளது. அனிருத் பாடிய இப்பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பாக தமிழகத்தில் பீஸ்ட் படத்தை வெளியிடுகிறார். இந்தப் படத்தின் டிக்கெட் முன் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பீஸ்ட் படத்துடன் கேஜிஎஃப் படமும் வெளியாவதால் இரண்டு படங்களுக்கும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி படத்துக்கு பிறகு தென்னிந்திய படங்களுக்கு இந்திய அளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் காரணமாக இரண்டு படங்களும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
எளிதாகக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தில்லியை சோ்ந்தவரிடம் ரூ.20,000 மோசடி! பெண் கைது!!
சட்டவிரோதமாக போதைப் பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட 4 போ் கைது

தொழிலாளியை தாக்கிய இருவா் மீது வழக்கு
2025-இல் 235.8 கோடி பயணிகளை கையாண்ட தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன்!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

