பணமோசடி தொடர்பாக நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னர் வகையறா படத்துக்காக ரூ. 5 கோடி பணம் பெற்று மோசடி செய்துவிட்டதாக நடிகர் விமல் மீது தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் ஆகியோர் சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்கள். இப்பிரச்னை தொடர்பாக விமல் மீது நான்கு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. காவல்துறைக்கு விளக்கமளித்த விமல், தன்னைத் தான் சிங்காரவேலன் ஏமாற்றி விட்டதாகப் புகாரும் அளித்திருந்தார்.
சிங்காரவேலன் தான் கோபிக்குப் பணம் கொடுக்கவேண்டும். எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. சிங்காரவேலன், கோபி ஆகிய இருவர் மீதும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்காரவேலன் கொடுத்த தொல்லையால் கடந்த மூன்று ஆண்டுகளாக நான் மன உளைச்சலில் இருந்தேன் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் விமல்.
இதற்கு முன்பு, தனது பெயரைப் பயன்படுத்தி, போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடியில் ஈடுபட்டதாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நடிகர் விமல். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிங்காரவேலன் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது மீது 2021-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றிருந்தார் சிங்காரவேலன். எனினும் நீதிமன்ற உத்தரவுகளைச் சரியாகப் பின்பற்றாததால் தயாரிப்பாளர் சிங்காரவேலன் இன்று விருகம்பாக்கம் காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சிங்காரவேலன் மீது விமல் மற்றொரு புகார் அளித்துள்ளார். இதையடுத்து சிங்காரவேலன் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது 5 பிரிவுகளில் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலும் சிங்காரவேலன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: அதிமுக, நாதக வேட்பாளா்கள் மீது வழக்கு

உசிலம்பட்டி அதிமுக வேட்பாளா் உள்பட 20 போ் வேட்பு மனு தாக்கல்

நடிகா்களுக்குள்ள புகழால் மட்டும் தோ்தலில் வெற்றி பெற முடியாது:கருணாஸ்

முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


