6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

என்னை விட கார்த்திதான் சிறந்த நடிகர்: சூர்யா

விருமன் இசை வெளியீட்டு விழாவில் தன்னை விட கார்த்தி தான் சிறந்த நடிகர் என தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா நெகிழ்ச்சியாக கூறினார். 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 9:33 am

DIN

விருமன் இசை வெளியீட்டு விழாவில் தன்னை விட கார்த்தி தான் சிறந்த நடிகர் என தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா நெகிழ்ச்சியாக கூறினார். 

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். கொம்பன் படத்துக்கு பிறகு கார்த்தி மற்றும் இயக்குநர் முத்தையா இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மதுரை ராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர்கள் கார்த்தி, சூர்யா, இயக்குநர்கள் ஷங்கர், பாரதி ராஜா, முத்தையா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதில் நடிகர் சூர்யா பேசியதாவது: 

எனக்கு தேசிய விருது கிடைத்தது. அதை நான் கொண்டாடும் முன்பு ரசிகர்கள் நீங்கள் கொண்டாடியது மகிழ்ச்சி. கார்த்தி எப்போதும் சினிமாவைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருப்பான். என்னை விடவும் கார்த்திதான் சிறந்த நடிகர். இதை நான் எந்த மேடையிலும் தயங்காமல் பெருமையாகவே சொல்லுவேன். இசையமைப்பாளர் யுவனும் எனக்கு தம்பிதான். இருவருக்குமே விரைவில் பல விருதுகள் கிடைக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.