ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்துடன் நடிப்பதை நடிகை ரம்யா கிருஷ்ணன் உறுதிசெய்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வருகிற 15 அல்லது 22 ஆம் தேதி துவங்கும் என நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தெரிவித்தார். இதனிடையே ஜெயிலர் படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் நடிக்க, ராக்கி படத்தின் மூலம் மிரட்டிய வசந்த் ரவி வில்லனாக நடிக்கிறாராம். மேலும் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
பொதுவாக சன் பிக்சர்ஸ் தங்கள் படங்களில் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களை முதலிலேயே அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள். ஆனால் ஜெயிலர் படத்தின் நடிகர்கள் பட்டியலை இதுவரை சன் பிக்சர்ஸ் வெளியிடவில்லை.
இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயிலர் படத்தில் நடிப்பதை உறுதிசெய்துள்ளார். இதுகுறித்து அவர் நான் ரஜினிகாந்த்துடன் மீண்டும் நடிப்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
படையப்பா படத்தில் ரஜினிகாந்த்துக்கு வில்லியாக நீலாம்பரி என்ற வேடத்தில் டிகர் ரஜினிகாந்த்தின் நடிப்பை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்கவிருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!
மகாராஷ்டிரம்: பக்ரீத்தையொட்டி பலியிட ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: பன்றிகளுடன் போராட்டம்!

கொறடா உத்தரவை மீறியது தவறு: மன்னிப்பு கோரி ஓ.எஸ். மணியன் கடிதம்!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.73! 47 காசுகள் சரிவு!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



