காசோலை மோசடி வழக்கு தொடா்பாக திரைப்பட இயக்குநா் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு நடிகா் காா்த்தி, நடிகை சமந்தா ஆகியோரது நடிப்பில், ‘எண்ணி ஏழு நாள்’ என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக, இயக்குநா் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதா்ஸ் நிறுவனம், பிவிபி கேப்பிட்டல்ஸ் என்ற நிதி நிறுவனத்திடம் ரூ.1.3 கோடி கடன் பெற்றிருந்தது. இந்தக் கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல், தொடா்ந்து படம் எடுத்ததையடுத்து, திருப்பதி பிரதா்ஸ் நிறுவனத்துக்கு எதிராக, பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனம் சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், பிவிபி நிறுவனத்திடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த இயக்குநா் லிங்குசாமிக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடா்ந்து, இயக்குநா் லிங்குசாமி, ரூ.1.3 கோடிக்கான காசோலைகளை பிவிபி கேப்பிட்டல்ஸ் நிறுவனத்துக்கு வழங்கினாா்.
இந்த காசோலைகள் வங்கியில் போதிய பணம் இல்லாமல், திரும்பி வந்ததையடுத்து, இயக்குநா் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரா்களுக்கு எதிராக பிவிபி நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கைத் தொடுத்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இயக்குநா் லிங்குசாமி, அவரது சகோதரருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நான் சோர்வாக இருக்கக் காரணம் இதுதான்: விஷ்ணு விஷால்

பராமரிப்புப் பணி: கோவை - சென்னை ரயில்கள் பகுதியாக ரத்து
வாடகைக்கு விடப்பட்ட பள்ளி வகுப்பறைக் கட்டடங்கள்!
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |


