தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

'ஏகே 62' படத்துக்காக மீண்டும் இணையும் அஜித் குமார் - ஐஸ்வர்யா ராய்?

ஏகே 62 படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல் கிடைத்துள்ளது. 

News image
Updated On :30 ஆகஸ்ட் 2022, 11:04 am

DIN

ஏகே 62 படத்தில் நடிகர் அஜித்குமாருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல் கிடைத்துள்ளது. 

நடிகர் அஜித் தற்போது ஏகே 61 படத்தில் நடித்துவருகிறார். வினோத் இயக்கிவரும் இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் நாயகியாக நடிக்க, ஜிப்ரான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.  போனி கபூர் தயாரிக்கிறார். 

முதலில் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அதற்கு வாய்ப்பில்லை என தெரிகிறது.மேலும் பொங்கலுக்கு விஜய்யின் வாரிசுடன் 'ஏகே 61' திரைப்படம் வெளியாகலாம். 

இந்த நிலையில் 'ஏகே 62' படம் குறித்து முக்கிய தகவல் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அஜித்தின் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறதாம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம்.

விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. தற்போது விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் ஸ்பெயின் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.