த்ரிஷ்யம் மூன்றாம் பாகம் உருவாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘த்ரிஷ்யம்’ , ‘த்ரிஷ்யம் 2’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் 3-ஆம் பாகம் குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
நேர்காணல்கள், சந்திப்புகளில் ஜித்து ஜோசப்பிடம் ’த்ரிஷ்யம் 3’ குறித்து அதிகக் கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன.
இதையும் படிக்க: ‘கோப்ரா’ திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை
இந்நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் ஆசிர்வாத் சினிமாஸ் - ஆண்டனி பெரும்பாவூர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ‘த்ரிஷ்யம் 3’ உறுதி எனக் கூறியுள்ளார்.
தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபடும் இளைஞரை ஜார்ஜ் குட்டி(மோகன்லால்) மகள் அடித்துக் கொல்கிறாள். இந்தக் கொலையை மறைக்க ஜார்ஜ் தன் குடும்பத்தினருடம் எதிர்கொள்ளும் சவால்கள் எதிர்பாராத திருப்பங்கள் என த்ரிஷ்யம் கதைகள் உருவாக்கப்பட்டிருந்தது. மூன்றாம் பாகம் அதன் இறுதி பாகமாக இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!

பிளே ஆஃப்ஸ் போட்டிகளில் சொதப்பும் விராட் கோலி..! முற்றுப்புள்ளி வைப்பாரா?

ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



