ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

வெளியானது செல்வராகவனின் ‘பகாசூரன்’ டிரைலர்! 

மோகன்.ஜியின் இயக்கத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில் பகாசூரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :5 டிசம்பர் 2022, 3:55 pm

DIN

திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது பகாசூரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அதில் இயக்குநர் செல்வராகவன் நாயகனாக நடித்திருக்கிறார். மேலும் படத்தில் ஒளிப்பதிவாளர் நட்டி என்னும் நடராஜ் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

சமூகத்தில் நடக்கும் ஒரு முக்கிய நிகழ்வை மையமாகக் கொண்டு பகாசூரன் படத்தின் கதையை அமைத்துள்ளனர். படப்பிடிப்பு ஏற்கெனவே முடிவடைந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

படம் விரைவிலேயே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பகாசூரன் திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.