பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'வாரிசு'. இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். 2023 பொங்கலுக்கு வெளியாகும் இந்தத் திரைப்படத்திற்கான இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
வாரிசு படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி 8.5 கோடி (85 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது பாடல் டிசம்பர் 4ஆம் தேதி மாலையில் சிம்பு குரலில் வெளியானது. இந்தப் பாடலும் 1.6 கோடி (16 மில்லியன்) பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனிருத் விஜய் படங்களுக்கென்று தீம் மியூசிக் இசையில் ஒரு முத்திரையை பதித்துவிட்டார். தற்போது தமன் இதை தாண்டுவாரா என்பதே ரசிகர்களின் கேள்வி. இந்நிலையில் தமன் ஒரு நேர்காணலில்,“நீ இதைப் பண்ணிட்டியா. சரி நான் இதைப் பண்றேன் பாரு. எனக்கு தளபதி விஜய் மேல லவ் எவ்ளோ இருக்குனு காட்டுற நேரம். அனிருத் கிட்ட பேசும்போதெல்லாம் வாரிசு ஆல்பம் கேளு” என ஜாலியாக சவால் விடுவேனென கூறியுள்ளார். ரசிகர்கள் இந்த விடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து தமன் நிரூபித்துவிட்டார் என பதிவிட்டு வருகின்றனர்.
’அவருக்கு இது பிடிக்காது..’ நடிகர் அஜித் குறித்து இயக்குநர் எச்.வினோத் கருத்து
விஜய் 67 படத்தைக் கைப்பற்றிய ஓடிடி நிறுவனம் இதுதான்!
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் படங்கள்!
‘அம்மா சாப்ட்டு 6 நாள் ஆச்சு. இதுதான் நல்ல படமா?’- ரசிகர்கள் கிண்டல்!
‘ப்ளூசட்டை’ விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன்: கோல்டு இயக்குநர்