‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து!

கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வான ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து!

கோல்டன் குளோப் விருதுக்கு தேர்வான ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் அல்லுரி சீதா ராமராஜூ (ராம் சரண்), கொமரம் பீம்(ஜூனியர் என்டிஆர்) என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து உருவாக்கப்பட்ட ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பதிவு செய்ததுடன் உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்துள்ளது.

இப்படத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். 

இந்தப் படம் தற்போது ஜப்பானிலும் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது. 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்காவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள் ஆர்ஆர்ஆர் படத்துக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தனர். 

இந்நிலையில் ஜனவரி 10ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள கோல்டன் குளோப் விருதுக்கு சிறந்த திரைப்படம் (ஆங்கிலம் அல்லாத) பிரிவிலும், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இந்தப்படம் தேர்வாகியுள்ளது. இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com