மைக்கேல்: பிரதீப் குமார் குரலில் ப்ரோமோ பாடல் வெளியானது!
மைக்கேல் படத்தின் ‘நீ போதும் எனக்கு’ பாடலின் ப்ரோமோ பாடல் வெளியானது.


புரியாத புதிர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘மாநகரம்’ படத்தில் நடித்து புகழ்பெற்ற சந்தீப் கிஷன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ‘மெக்கேல்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் வரலட்சுமி சரத்குமார், அனுசுயா, திவ்யன்ஷா கௌசிக் உள்ளிட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஸ்ரீனிவாஸ் தயாரிக்க, சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
தற்போது ‘நீ போதும் எனக்கு’ பாடலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழில் பிரதீப் குமார் பாடியுள்ளார். தெலுங்கில் சித் ஸ்ரீராமும் பாடியுள்ளார். நாளை (டிச.28) இந்தப் பாடல் மாலை 4.05 மணிக்கு வெளியாகும்.
ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் அடுத்தாண்டு பிப்ரவரியில் திரைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...