புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘நரையைக்கூட மை பூசி மறைக்காமல்...’- அஜித் குறித்து பார்த்திபனின் ட்வீட்! 

நடிகர் அஜித்குமார் தனது தலை முடிக்கு கறுப்பு மை பூசுவதில்லை என பாராட்டியுள்ளார் இயக்குநரும் நடிகருமான ஆர். பார்த்திபன். 

News image
Updated On :27 டிசம்பர் 2022, 2:46 pm

DIN

பார்த்திபன் எழுதி இயக்கி, தயாரித்த படம் இரவின் நிழல். இப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதில் பார்த்திபனுடன் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இரவின் நிழல் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமாக உருவாகியிருந்தது. பல்வேறு விருதுகளை வென்ற படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியானது.  

நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம் வரும் பொங்களுக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  எப்போதும் வித்தியாசமாக வார்த்தைகளை வைத்து விளையாடுவதில் பார்த்திபன் வித்தகர். தற்போது பார்த்திபன் தன்னுடை ட்விட்டர் பக்கத்தில் கையில் வாளுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்து 3 பாகமாக ஒரு பதிவு எழுதியுள்ளார்.

“வேள்பாரி யாரோ? வாள்பாரி நான்..” எனத் தொடங்கும் அந்த ட்வீட், “இருந்தால் சீவி சிங்காரித்துக் கொள்வதும், கொட்டிவிட்டால் மயிரே போச்சி”என ’சில்லா சில்லா’ பாடியே (நரையைக்கூட மை பூசி மறைக்காமல் திரை கிழியும் விசிலுடன் அஜீத்தி) துணிவுடன் நாளை எதிர்கொள்வதுமே வாழ்வின் இன்பம் பொங்கல்!” என முடித்துள்ளார். இதன் கடைசியாக, “ புதிய சொல் பொருள்: அஜீத்தி = அசத்தி” எனவும் பதிவிட்டுள்ளார். 

ரசிகர்களுக்கு இந்த பதிவில் எது புரிந்ததோ இல்லையோ நடிகர் அஜித்தை பாராட்டியது மட்டும் புரிந்துள்ளது. அஜித் ரசிகர்கள் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். சிலர் “புரிஞ்சமாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு” என கிண்டல் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.