
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க: சுஷாந்த் சிங் கொலை? மருத்துவமனை ஊழியர் அதிர்ச்சி தகவல்!
இந்நிலையில் லைகா நிறுவனம் வெளிநாடுகளில் வேற லெவல் புரமோஷனை செய்து வருகிறது. வானத்தில் ஸ்கை டைவிங் செய்து கொண்டு துணிவு படத்தின் அப்டேட் டிச.31 அன்று வெளியாகுமென புதிய புரமோஷன் விடியோவை வெளியிட்டுள்ளனர். அஜித் ரசிகர்கள் இந்த விடியோவினை பகிர்ந்து வேற லெவல் அப்டேட் என இணையத்தில் வைரலாக்குகின்றனர்.
இதையும் படிக்க: அஜித்தின் எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து கேலிக்குள்ளான நடிகர்!
இதற்கு சில இணையவாசிகள் மற்றும் விஜய் ரசிகர்கள், “நல்ல படத்திற்கு புரமோஷன் தேவையில்லை என கூறிவிட்டு இப்படி செய்வது இது நல்ல படமல்ல என அர்த்தமாகுமா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் அஜித்தின் மேலாளர் அஜித் கூறியதாக நல்ல படத்திற்கு புரமோஷன் தேவையில்லை என பதிவிட்டு இருந்தார். ரசிகர்கள் இந்த பதிவினை ஸ்கிரின்ஷாட் எடுத்து கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...