ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

‘கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கல...’- செல்வராகவனின் புதிய ட்வீட்! 

இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் இன்று புதிய ட்வீட்டை பதிவிட்டுள்ளார். 

Published On :6 பிப்ரவரி 2024, 6:22 pm IST

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் செல்வராகவன். பின்னர் அவரது படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. தற்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். மோகன் ஜி. இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வர உள்ளது.

செல்வராகவன் ட்விட்டரில் அடிக்கடி பதிவிட்டு வருவார். சமீபத்தில் செல்வராகவன், “தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்” எனப் பதிவிட்டது சர்ச்சையானது. இந்தப் பதிவுக்கு சிலர் ‘உண்மைதான்’ எனவும், சிலர்  ‘என்னாச்சி சார், நீங்களும் விவாகரத்து செய்யப்போறீங்களா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது புதிய ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், “எவ்வளவோ திறமை இருந்தும் சோம்பேறித்தனத்தால் முடங்கி கிடந்து, வாழ்க்கையில் ஜாலியாய் இருக்க வேண்டும் என சுற்றித் திரிந்து, காலம் முழுவதையும் வீணடித்து விட்டு ‘கடவுள் எனக்கு மட்டும் ஏன் கொடுக்கலன்னு தெரியல’ என மீதி வாழ்க்கையையும் தொலைத்து விடாதீர்கள். அனுபவம்” எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும்  “ஆமாம், உண்மை. தன்னம்பிக்கையாக உணர்கிறேன்” என கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.