தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நடிகர் அருண் விஜய்க்கு கரோனா

நடிகர் அருண் விஜய்க்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

News image
Updated On :5 ஜனவரி 2022, 9:52 am

நாடு முழுவதும் கரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து நாடு முழுவதும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

பிரபலங்கள் பலரும் கரோனா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அருண் விஜய்க்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், எல்லோருக்கும் வணக்கம். எனக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. நான் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் எல்லா பாதுகாப்பு நடைமுறைகளையும் மேற்கொண்டுள்ளேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.