டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ரஜினிகாந்த் மகளைப் பிரிந்தார் நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

News image
ஐஸ்வர்யா - தனுஷ்
Updated On :18 ஜனவரி 2022, 3:31 am

DIN


நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரையில் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஐஸ்வர்யா உடனான 18 ஆண்டுகால மணவாழ்க்கை முடிவுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். 

நண்பர்களாகவும், தம்பதிகளாகவும், குழந்தைகளுக்கு பெற்றோராகவும், பாதுகாவலர்களாகவும் ஒன்றாக பயணித்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

தற்போது எங்கள் பாதை தனித்தனியாக பிரிய வேண்டிய கட்டத்தை எட்டியுள்ளது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்வதற்கான நேரத்திற்காக நானும் ஐஸ்வர்யாவும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம்.

எங்கள் முடிவுக்கு மரியாதை கொடுத்து, இந்த சூழலை தனிப்பட்ட முறையில் எதிர்கொள்வதற்கு எங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டுகிறேன். நன்றி என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Story image

இதனை இயக்குநரும், ரஜினிகாந்த் மகளுமான ஐஸ்வர்யாவும் அறிக்கையாக வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார். ஐஸ்வர்யாவுக்கும், தனுஷுக்கும் கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.