/

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'மாநகரம்' ஹிந்தி ரீமேக்

விஜய் சேதுபதி நடித்துள்ள மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

News image
Updated On :27 ஜனவரி 2022, 7:20 am

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்தப் படம் ஹிந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்தப் படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இந்தப் படத்தில் விக்ராந்த் மஸ்ஸே, தான்யா மனிக்டாலா உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி தமிழில் முனீஷ்காந்த் நடித்த வேடத்தில் நடித்துள்ளார். 

Story image

பிரசாந்த் பிள்ளை இந்தப் படத்துக்கு இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.