தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

இரவின் நிழல் படம் நிச்சயமாக நன்றாக ஓடும்: ரஜினி

29 நிமிடங்கள் இந்தப் படத்தை எப்படி எடுத்தார்கள் எனக் காண்பித்துள்ளார்களாம். புல்லரிக்குமாம்.

News image
Updated On :13 ஜூலை 2022, 8:49 am

DIN

இரவின்  நிழல் படத்தின் மூலம் வித்தியாசமாக முயற்சி செய்திருக்கும் பார்த்திபனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இரவின் நிழல் என்கிற படத்தைத் தற்போது இயக்கியுள்ளார் பார்த்திபன். இதற்கு முன்பு வெளியான ஒத்த செருப்பு படத்தில் பார்த்திபன் நடித்த ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இடம்பெற்றது. இரவின் நிழல் படம் நான் லீனியர் முறையில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரியங்கா ருத், பிரிகடா போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஆர்தர் வில்சன். இசை - ஏ.ஆர். ரஹ்மான். ஜூலை 15 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்நிலையில் இரவின் நிழல் படத்தில் பார்த்திபன் மேற்கொண்ட முயற்சிகளுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியான விடியோவில் ரஜினி கூறியதாவது:

பார்த்திபன்... வித்தியாசமாக முயற்சிகள் செய்யவேண்டும் என்று எப்போதும் ஏதாவது செய்யத் துடிக்கிற கலை ரசிகர். நான் லீனியர் சிங்கிள் ஷாட். உலகத்திலேயே இதுவரை யாரும் எடுத்தது கிடையாது. 29 நிமிடங்கள் இந்தப் படத்தை எப்படி எடுத்தார்கள் எனக் காண்பித்துள்ளார்களாம். புல்லரிக்குமாம். இந்தப் படம் மிகவும் நன்றாகப் போகும் என்றார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.