டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது! 9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!இடைத்தேர்தல்: மதுராந்தகத்தில் 85.97%, தாராபுரத்தில் 80.31% வாக்குகள் பதிவுமேற்கு வங்க இடைத்தேர்தல்: நந்திகிராம் - 80.69%, ரெஜிநகர் - 79.90% வாக்குப் பதிவு!ஆரம்பக் கட்டணம் ரூ. 14 லட்சம்! தமிழ்நாட்டில் அயல்நாட்டு பல்கலை.க்கு அனுமதி: சிபிஎம் கண்டனம்எஸ்ஐஆர்: மோடியும் அமித் ஷாவும் நாட்டை கொள்ளை அடிக்கின்றனர்! ராகுல் பேட்டி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அசம்பாவிதமின்றி அமைதியான முறையில் வாக்குப் பதிவு நிறைவுதிருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம்: சிறப்பு தரிசனத்துக்கான முன்பதிவு நாளை தொடக்கம்இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம் உள்பட 6 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு!பைக் பந்தயம்: சென்னையில் 3 நாள்களில் 2,000 வாகனங்கள் பறிமுதல்!

'ஜெயிலர்' ரஜினியுடன் மோதும் ராக்கி

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் ராக்கி பட நடிகர் வசந்த் ரவி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Published On :

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தில் ராக்கி பட நடிகர் வசந்த் ரவி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது. விக்ரம் பட பாணியில் ஜெயிலர் படப்பிடிப்பு துவங்கும் முன்பே டீசர் வெளியிட நெல்சன் முடிவெடுத்துள்ளாராம். இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையிலுள்ள ஸ்டுடியோ ஒன்றில் படமாக்கப்பட்டுள்ளது.  

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்துடன் முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவராஜ்குமார் ரஜினியுடன் நடிப்பதை உறுதி செய்திருந்தார். 

மேலும் ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனும் சிறப்பு வேடத்தில் நடிக்கிறாராம். ஆனால் இந்த தகவல்கள் எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை. 

இந்த நிலையில் தரமணி, ராக்கி படங்களின் மூலம் கவனம் ஈர்த்த வசந்த் ரவி இந்தப் படத்தில் நடிக்கிறாராம். ராக்கி படத்தில் வசந்த் ரவியின் நடிப்பு விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.